SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்களுக்கு பாதுகாப்பில்லை

2018-02-14@ 00:35:36

சின்னசேலம்: விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு  கேள்விக்குறியாக உள்ளது. தலைநகர் சென்னையில் 100 ரவுடிகள் ஒன்றுகூடி பிறந்த  நாள் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்  கெட்டுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பணம், நகை  கொள்ளையடிப்பது வாடிக்கையாக உள்ளது. அரசு தடுக்க எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இங்கு பல்கலை துணைவேந்தர், டிஎஸ்பி என பலரும் லஞ்ச வழக்கில் கைது ஆகுவதன் மூலம் தமிழ் நாட்டில் லஞ்சம் தலைவிரித்தாடுவது தெரிகிறது.  படித்த தகுதியான இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. பணம் படைத்தவர்களுக்கே  வேலை கிடைக்கிறது. சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தின்மூலம் முதல்  குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை சட்ட சபையில் திறப்பதை வன்மையாக  கண்டிக்கிறோம், என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்