SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8வது நாளாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுகவினருடன் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு

2018-02-14@ 00:33:56

சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 8வது நாளாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடத்தினார். இன்று பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். திமுகவில் மாவட்ட வாரியாக கட்சி மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட திமுக முன்னணியினருடன், திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கள ஆய்வு என்ற பெயரில் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார். அப்போது, திமுகவினரிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதற்காக தீர்வு காணும் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. கள ஆய்வு முடிந்ததும் திமுகவினருடன் அமர்ந்து மு.க.ஸ்டாலின் மதிய உணவு சாப்பிடுகிறார். பின்னர் மாலையில் மீண்டும் கள ஆய்வு தொடங்கி இரவு வரை நடத்துகிறார்.

கோரிக்கைகளை கேட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு உறுதி அளித்து வருகிறார். வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக கட்சிப் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறார். தினமும் ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் குவிகின்றன. மனுக்களை பிரித்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதற்காக வக்கீல் என்.ஆர்.இளங்கோ தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி தொடங்கியது. நேற்று 8ம் நாள் கள ஆய்வு நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் காலை 9 மணிக்கு தொடங்கியது.  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா. மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்ஏ. மற்றும் நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடத்தினார். பின்னர் அணிகளின் செயலாளர்கள் ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக முன்னணியினருடன் ஆலோசனை நடத்தினார்.

9வது நாளாக, இன்று காலை 9 மணிக்கு கள ஆய்வு தொடங்குகிறது. ெபரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள், செயற்குழு பொதுக் குழு உறுப்பினர்களுடன் கள ஆய்வு நடத்தி கருத்துக்களை ஸ்டாலின் கேட்டறிகிறார். மாலையில் அரியலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான கள ஆய்வு நடக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்