SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

சில்லி பாயின்ட்...

2018-02-14@ 00:33:49

* ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் (ஏப்ரல் 4-15) மகளிர் ஜிம்னாஸ்டிக்சில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர் விலகியுள்ளார். முழங்கால் மூட்டு காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் கர்மாகர், ஆசிய விளையாட்டு போட்டிக்கு (ஆகஸ்ட் 18 - செப். 2) முழு உடல்தகுதியுடன் தயாராகிவிடுவார் என பயிற்சியாளர் விஸ்வேஸ்வர் நந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நெருங்குவதால், பார்சிலோனா கிளப் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடுவதை நட்சத்திர வீரரும் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி தவிர்க்க வேண்டும் என்று அர்ஜென்டினா கால்பந்து சங்கத் தலைவர் கிளாடியோ தாபியா வலியுறுத்தி உள்ளார்.
* ஐபிஎல் டி20 தொடரில் களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் சுழற்பந்துவீச்சாளார் ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) நியமிக்கப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டு நடந்த ஐபிஎல் முதலாவது சீசனில் இவரது தலைமையில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* தென் ஆப்ரிக்க மகளிர் அணியுடன் நடக்க உள்ள டி20 தொடரில் இருந்து, இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி காயம் காரணமாக விலகியுள்ளார்.
* இலங்கை அணிக்கு எதிராக நடக்க உள்ள டி20 தொடரில் வங்கதேச ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஐபிஎல் டி20 தொடரின் மூலமாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 2000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பிசிசிஐ-க்கு இதர வகையில் கிடைக்கும் வருமானம் 125 கோடு மட்டுமே.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

 • manohar_cm12

  கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்