SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் ஆப்ரிக்க டி20 அணியில் 3 புதுமுக வீரர்கள் தேர்வு

2018-02-14@ 00:33:46

ஜோகன்னஸ்பர்க்: இந்திய அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் ஹெய்ன்ரிச் கிளாசன் உட்பட 3 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் தென் ஆப்ரிக்கா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து இரு அணிகளும் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதி வருகின்றன. இந்த தொடர் நிறைவடைந்ததும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்ரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஜீன் பால் டுமினி தலைமையிலான அணியில் மொத்தம் 14 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். புதுமுக வீரர்கள் ஹெய்ன்ரிச் கிளாசன், கிறிஸ்டியன் ஜாங்க்கர், ஜூனியர் டாலா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொடரின் முடிவில் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ளதால் முன்னணி வீரர்கள் எய்டன் மார்க்ராம், ஷாஷிம் அம்லா, மார்னி மார்கெல், காகிசோ ரபாடா, வெர்னான் பிலேண்டர், இம்ரான் தாஹிர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. முதல் டி20 போட்டி ஜோகன்னஸ்பர்கில் 18ம் தேதியும், 2வது போட்டி செஞ்சுரியனில் 21ம் தேதியும் நடைபெற உள்ளன. கடைசி போட்டி 24ம் தேதி கேப் டவுனில் நடக்கிறது.
தென் ஆப்ரிக்கா டி20 அணி: ஜே.பி.டுமினி (கேப்டன்), பர்கான் பெகார்டியன், ஜூனியர் டாலா, டி வில்லியர்ஸ், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், கிறிஸ்டியன் ஜாங்க்கர், ஹெய்ன்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், டேன் பேட்டர்சன், ஆரோன் பாங்கிசோ, பெலுக்வாயோ, டாப்ரைஸ் ஷம்சி, ஜான் ஜான் ஸ்மட்ஸ்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்