SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விஜய் ஹசாரே டிராபி கேரள அணியிடம் டெல்லி அதிர்ச்சி தோல்வி

2018-02-14@ 00:33:32

தர்மசாலா: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், கேரள அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கேரளா முதலில் பந்துவீசியது. டெல்லி அணி 39.3 ஓவரில் 177 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. துருவ் ஷோரி 71 ரன், மிலிந்த் குமார், கேப்டன் சங்வான் தலா 25, உன்முக்த் சந்த் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

கேரள பந்துவீச்சில் நிதீஷ் 4 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து 42 ஓவரில் 178 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கேரளா, 35.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து வென்றது.
கேப்டன் சச்சின் பேபி 52, சஞ்சு சாம்சன் 29, சக்சேனா 26, வினோத் 21, அசாருதீன் 21* ரன் எடுத்தனர். கேரள அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. பி பிரிவில் டெல்லி அணி 5 போட்டியில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, இமாச்சல் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்த இடங்களில் உள்ளன. உ.பி (8), பெங்கால் (6), திரிபுரா (0) அணிகள் பின்தங்கியுள்ளன. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் சி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழகம் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்