SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிப். 17, 18 தேதிகளில் சென்னை மாவட்ட செஸ் போட்டிகள்

2018-02-14@ 00:33:30

சென்னை: சென்னை மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில்  9, 13, 17, 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செஸ் போட்டிகள் இம்மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. கிங் செஸ் அறக்கட்டளை சுழற் கோப்பைக்கான இத்தொடரில் 9, 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளும், சக்தி செஸ் அறக்கட்டளை சுழற் கோப்பைக்கான போட்டிகளில்  17வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளும், எம்.ஜே.இஸ்மாயில் நினைவு சுழற் கோப்பைக்கான போட்டிகளில் 25வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களும் பங்கேற்கலாம்.

போட்டிகள்  சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் பிப். 15ம் தேதிக்குள் www.paychessentry.com அல்லது www.easypaychess.com  என்ற இணையதளங்களில் பதிவு செய்து கட்டணங்களை செலுத்த வேண்டும். இந்த தகவல்களை சங்கத்தின் செயலாளர் கணேசன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்