SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் பயங்கரம் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை: முன்விரோதம் காரணமாக அரங்கேறிய சம்பவம்

2018-01-14@ 00:55:40

சென்னை: முன்விரோதம் காரணமாக சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி கஜபதி தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன். இவருடைய மகன் முனியன் (24), ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். தற்போது, அவருக்கு 2 மகன்கள்  உள்ளனர்.இந்நிலையில், நேற்று மாலை முனியன் ஐஸ்அவுஸ் ராம்நகர் 8வது தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முனியனை வழிமறித்தனர்.  உடனே, அவர் தப்பிக்க ஓடினார். ஆனாலும் அவர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதை பார்த்து அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ரத்த வெள்ளத்தில்  துடித்த முனியன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஐஸ்அவுஸ் போலீசார் முனியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த சத்யா என்ற பாம்பே சத்யா என்பவருக்கும், முனியனின் சகோதரர் அருணுக்கும் முன்விரோதம்  இருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக, அருணை பழிவாங்கும் நோக்கத்தில், அவரது சகோதரர் முனியன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முனியன் கொலை வழக்கில் போலீசார் சந்தேகப்படும் சத்யா என்ற பாம்பே சத்யா மீது சென்னை மாநகரில் உள்ள சில காவல் நிலையங்களில் பல்வேறு கொலை வழக்குகள் மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது  குறிப்பிடத்தக்கது.பட்டப்பகலில்  ஓட ஓட வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஐஸ் அவுஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்