SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க சிறைகளில் ஜாமர்களை பொருத்த ஐகோர்ட் உத்தரவு

2018-01-14@ 00:50:31

சென்னை: விடுதலையான சிறைவாசிகள் உதவி சங்கத்திற்கு தமிழகத்தில் 16 மாவட்டங்களில் சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் தற்போது குத்தகை அடிப்படையிலும், வாடகை அடிப்படையிலும் வெளி நபர்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த சங்கங்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் மேற்பார்வையில் இயங்கி வருகிறது. சங்கங்களுக்கு கவுரவ தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குத்தகைக்கு எடுத்தவர்களில் பலர் உரிய வாடகையைத் தராமல் இருப்பதாகவும், அந்த கட்டிடங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதை வழக்காக பதிவு செய்த உயர் நீதிமன்றம் டிஜிபிக்கு சில கேள்விகளுக்கு பதில் தருமாறு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், டிஜிபி அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விடுதலையான சிறைவாசிகள் உதவி சங்கங்களின் நிலை குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் கலெக்டர்களைத் தொடர்பு கொண்டு அந்த சொத்துக்களின் மதிப்பு, மாத வாடகை உள்ளிட்ட தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் உள்துறை செயலாளரையும், டிஜிபிஐயும்  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நேரிடும். தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் செல்போன் தாராளமாக புழங்குவதாகவும் அதனால் பல குற்ற நடவடிக்கைகள் சிறையில் உள்ள கைதிகளாலேயே நடக்கிறது என்றும் பத்திரிகை செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த செல்போன்கள் சிறைகளுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்படுகிறது.

எனவே, செல்போன்களை செயலிழக்கச் செய்யும் ஜாமர்களை சிறைகளில் வைத்தால் செல்போன்களை கைதிகள் பயன்படுத்துவதை தடுக்க முடியும். அடுத்ததாக, முதல் முறை குற்றச்செயலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படுபவர்களை ஏற்கனவே உள்ள கடும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுடன் அடைக்கக்கூடாது. இது குறித்து அரசு உரிய நடைமுறைகளைக் கொண்டு வர வேண்டும். சிறைகளில் எந்தெந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள் தேவை என்பதை கண்டறிந்து அந்த இடங்களில் கேமராக்களை அமைக்க வேண்டும். இது குறித்த அறிக்கையை அரசு வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும், சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் மறுவாழ்வுக்கு உதவி செய்யப்படுகிறதா?, அவர்களுக்கு மறுவாழ்வுக்கான வழி செய்யப்படவில்லை என்றால் எந்த விதமாக உதவிகள் செய்யப்படுகின்றன? இந்த கேள்விகளுக்கு அரசு வரும் 22ம் தேதி பதில் தரவேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2018

  21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • DryingClothingfestival

  சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

 • unmanedbookshopchina

  சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

 • newyork_steam_explosion

  நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

 • Apollo11NeilArmstrong

  நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்