SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தரமணி பகுதியில் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது: ஆட்டோ, 12 சிலிண்டர்கள் பறிமுதல்

2018-01-14@ 00:49:21

வேளச்சேரி: தரமணி பகுதியில் வீட்டின் முன் வைத்திருந்த காஸ் சிலிண்டரை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஆட்டோவுடன் 12 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.   தரமணி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு வீட்டின் முன்பு வைத்திருந்த காஸ் சிலிண்டரை ஆட்டோவில் வந்த 2 பேர் திருட முயன்றனர். இதை பார்த்த பொதுமக்கள் இருவரையும், மடக்கி பிடித்து தரமணி போலீசில்  ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் மேற்கு வேளச்சேரி, அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் உதயா (24), ஆதம்பாக்கம் பெரியார் நகர் 6வது தெருவை சேர்ந்த பெர்னாட் நாதன் என்ற அன்பு (39) என்பது  தெரியவந்தது.

இவர்கள் இருவரும் சிலிண்டர் போடுவதுபோல் ஆட்டோவில் வந்து யாராவது வீட்டின் முன்பு சிலிண்டர்களை வைத்திருந்தால், அவற்றை திருடி சென்று மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் கடைக்காரர்களிடம் காலி சிலிண்டர்  என்றால், ₹1300 முதல் 1800 வரை, காஸ் இருந்தால் ₹2000  வரை விற்பனை செய்து உள்ளனர். இருவர் மீது சிலிண்டர் திருடியதாக திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு  இருப்பதும், விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஆட்டோவுடன் 12 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்