SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனிமூட்டம், போகி புகை பாதிப்பு சென்னை ஏர்போர்ட் ஓடுதளம் மூடல்: 40 விமானங்கள் தாமதம் 18 தரையிறங்கவில்லை

2018-01-14@ 00:45:16

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பனிமூட்டம், போகி புகையால் 6 மணி நேரம் விமான நிலைய ஓடுதளம் மூடப்பட்டது.   பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.போகி பண்டிகையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் போன்றவைகளை நேற்று அதிகாலையில் இருந்து தீ வைத்து எரிக்கத்  தொடங்கினர். இதனால் கடுமையான புகை மூட்டம் காணப்பட்டது. சென்னை விமான நிலையத்திலும் ஓடுபாதை முழுவதும் புகை மண்டலமும், பனி மூட்டமும் சூழ்ந்து கொண்டது. இதனால் ஓடுபாதை முழுவதும் மறைந்து  விட்டது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து சென்னை விமான நிலையத்தில் எந்த விமானமும் தரை இறங்கவும் முடியவில்லை. புறப்படவும் முடியவில்லை.

குறிப்பாக துபாய், ஷார்ஜா, மஸ்கட், அபுதாபி, குவைத், கொழும்பு, லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 18 விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. சென்னையில் இருந்து அந்தமான்,  மும்பை, டெல்லி, மதுரை, கொல்கத்தா, ஐதராபாத் உள்பட பல இடங்களுக்கு செல்ல வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நேற்று காலை 7.25 மணி  விமானத்தில் ஐதராபாத் செல்ல காலை 6.30 மணிக்கெல்லாம் சென்னை விமான நிலையத்துக்கு வந்து விட்டார். ஆனால் விமானங்கள் புறப்பட முடியாததால் சிக்கி தவித்தார். இதேபோன்று பல ஆயிரக்கணக்கான பயணிகள் கடும்  அவதிக்குள்ளானார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் விமான போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கம். அதிகபட்சமாக 3 மணி நேரம்தான் பாதிக்கப்படும். ஆனால் நேற்று 6 மணி நேரத்துக்கும் மேலாக விமான சேவை பாதிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு மேல்  வெயில் தலைகாட்ட தொடங்கியதும் பனிமூட்டம் விலகியது. ஆனாலும் புகைமூட்டம் நீடித்தது.ஓடுபாதையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ‘’ஓடுபாதை ஓரளவு தெளிவு ஏற்பட்டதால் விமானத்தை கவனமாக இயக்கலாம்’’ என்று அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர். இதையடுத்து 9.15 மணிக்கு மேல்  விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட தொடங்கின. திருப்பி அனுப்பப்பட்ட விமானங்களும் 10 மணிக்கு மேல் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கின. இதனால் 6 மணி நேரம் விமான நிலைய ஓடுபாதை மூடப்பட்டு  பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘’இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக புகை மண்டலம் காணப்பட்டது. கடந்தாண்டுகளில் 15 நாட்களுக்கு முன்னதாகவே, விமான நிலையத்தை சுற்றியுள்ள  கிராமங்களில் அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவர்களை கொண்டு போகி பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவார்கள். இந்தாண்டு எந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்ததாக தெரியவில்லை’’  என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womenrallyUS

    அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு: 3 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி

  • delhi_fire_17dead

    டெல்லியில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி

  • kabul_terror_43

    காபுலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்