SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செவிலியர்கள் ஊதிய உயர்வு பிரச்னை : சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஐகோர்ட் உத்தரவு

2018-01-14@ 00:41:57

சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 7000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். செவிலியர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த கணேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச்  போராட்டத்திற்கு தடை விதித்து செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கூடுதலாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை ரூ.7000ல் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், கடந்த 6 ஆண்டுகளில் 6,600 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது, செவிலியர்கள் நல சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிடும்போது, செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.22 ஆயிரமாக உயர்த்த மருத்துவ பணிகள் இயக்குனர்  அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு நியமித்துள்ள குழு, செவிலியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு குறித்து ஏப்ரல் 20ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்