SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு பொருளில் ரூ.48 கோடி முறைகேடு?

2018-01-14@ 00:40:40

சென்னை: தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்பில் ரூ.48 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக வாட்ஸ்அப்பில் வரும் பரவும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பொங்கல் சிறப்பு தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி கரும்பு துண்டு ஆகியவை வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருள் வழங்க தமிழக அரசு ரூ.210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், பொங்கல் பரிசு வழங்கியதில் ரூ.210 கோடி செலவு ஏற்படவில்லை என்றும் சுமார் 162 கோடி வரை மட்டுமே செலவு ஆனதாகவும், ரூ.48 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக இரண்டு நாட்களாக வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி வாட்ஸ் ஆப்பில் ஒரு சின்ன கணக்கு’ என்று ஒரு தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது. அதில், பச்சரிசி 1 கிலோ 20 ரூபாய், சர்க்கரை 1 கிலோ 30 ரூபாய், முந்திரி 20 கிராம் ரூ.20, திராட்சை 20 கிராம் ரூ.10, ஏலக்காய் 5 கிராம் ரூ.3, கரும்பு ரூ.5 என மொத்தம் ஒரு குடும்பத்துக்கு 88 ரூபாய் அரசுக்கு செலவாகும்.

ஆனால், அரசு இதற்காக ரூ.210 கோடி ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 1 கோடியே 84 லட்சம் பேருக்கு தலா 88 ரூபாய் என்றால் மொத்த செலவு ரூ.162 கோடி வரை மட்டுமே செலவாகும். மீதி பணம் ரூ.48 கோடி வரை கையில் இருக்கும். அப்படியென்றால் இந்த ரூ.48 கோடியை உணவுத்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர்கள், அதிகாரிகள் முறைகேடு செய்து விட்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக அந்த வாட்ஸ்ஆப் தகவலில் வருகிறது. இது தமிழகம் முழுவதும் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womenrallyUS

    அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு: 3 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி

  • delhi_fire_17dead

    டெல்லியில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி

  • kabul_terror_43

    காபுலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்