SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதவி உயர்வு விவகாரம் மின்வாரிய தலைவர் உத்தரவை செயல்படுத்த அதிகாரிகள் மறுப்பு: தொழிலாளர்கள் பாதிப்பு

2018-01-14@ 00:36:48

சென்னை: தமிழக மின்வாரியத்தில் அதிகாரிகள் முதல் களப்பணியாளர்கள் வரை சுமார் 80,000 பேர் பணிபுரிகின்றனர். 40,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் உள்ளனர். அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது போன்று  களப்பணியாளர்களுக்கும் அனுபவத்தை பொறுத்து பதவி உயர்வு வழங்கப்படும். இந்நிலையில், பதவி உயர்வில் முறைகேடு நடந்ததால் அதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மின்வாரியத்தில்  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தற்காலிகமாக பதவி உயர்வு வழங்கவில்லை. இதற்கிடையில், நீதிமன்றத்தில் தடை நீங்கியதால் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்படி அனைத்து மண்டல தலைமை மற்றும்  கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வாரிய உத்தரவுப்படி, தற்போது தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாரியம் உத்தரவிட்ட பிறகும் பல இடங்களில் பதவி உயர்வு வழங்க அதிகாரிகள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறியதாவது: பல மாவட்டங்களில் முழுமையாக பதவி உயர்வு வழங்கிவிட்டனர். ஆனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் அதிகாரிகள் பதவி உயர்வு வழங்க மறுக்கின்றனர்.  சென்னை மேற்கு திருமங்கலம் அலுவலகத்தில் சுமார் 3,00 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இருந்தது. பிறகு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியவுடன் தற்போது 137 பேருக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளனர். வாரியமே உத்தரவிட்டும், அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சியால் பதவி உயர்வு வழங்க மறுப்பதை உயரதிகாரிகள் உடனடியாக கண்டிக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்