SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்டாவில் நெற்பயிரை காப்பாற்ற காவிரியில் 7 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுங்கள்: சித்தராமையாவுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

2018-01-14@ 00:36:48

சென்னை: காவிரி டெல்டாவில் நீரின்றி வாடும் நெற்பயிரை காப்பாற்ற குறைந்தபட்சம் 7 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்  எழுதியுள்ளார்.இதுகுறித்து, அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:பொங்கல் நன்னாளில் உங்களுக்கும் கர்நாடக மக்களுக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் 2007ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வெளியிட்ட இறுதித் தீர்ப்பில்,  ஒவ்வொரு பாசன ஆண்டிலும் தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவில் 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 2018ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வரை, தமிழகத்துக்கு 179.871 டிஎம்சி தண்ணீரை  கர்நாடகம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை 111.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. இன்னும் 68.224 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

கர்நாடகாவில் சாகுபடி பருவம் முடிந்துள்ள நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் உள்ள 4 முக்கிய அணைகளில் 49.82 டிஎம்சி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவை, வழக்கமான விவசாய பணிகளுக்கான நீர்தேவை  நீங்கலாக, காவிரி டெல்டாவில் நீரின்றி வாடும் நெற்பயிர்களுக்காக காவிரியில் 15 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் காவிரி டெல்டா விவசாயிகளின் அவலநிலையை கருத்தில் கொண்டு, நீரின்றி  வாடும் நெற்பயிர்களின் பாசனத்துக்காக குறைந்தபட்சம் 7 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்