SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடிமைப் பணியில் 985 பதவிகள் நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி : ஐஏஎஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நடத்துகின்றனர்

2018-01-14@ 00:34:11

சென்னை: குடிமைப் பணியில்  985 பதவிகளுக்கான நேர்முக தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) 2017ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் பணிகளில் அடங்கிய 985 பதவிகளை நிரப்புவதற்கு கடந்த ஜூன் 18ம் தேதி முதல்நிலை தேர்வை நடத்தியது. இதில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் இந்தியா முழுவதும் 13,365 பேரும், தமிழகத்தில் 810 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு அக்டோபர் 28, 30, 31, நவம்பர் 1, 3ம் தேதிகளில் நடந்தது.

இந்த நிலையில், மெயின் தேர்வுக்கான முடிவை அண்மையில் யுபிஎஸ்சி. வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் 2,568 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் மட்டும் 218 பேர் தேர்ச்சி பெற்றனர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிப்ரவரி 2வது வாரத்தில் டெல்லியில் நேர்முக தேர்வு நடக்கிறது. இந்நிலையில் நேர்முக தேர்வில் பங்கேற்பவர்களுக்காக சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்ட அறிவிப்பில், “ மெயின் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ள 218 பேரில், 171 பேர் எங்கள் அகடாமி பயிற்சி மையத்தில் படித்தவர்கள். எங்கள் அகடாமியில் அகில இந்திய அளவில் மிகச்சிறந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். அதிகாரிகளையும், தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களையும் மற்றும் பிற துறை சாந்தவர்களையும் கொண்டு நேர்முக தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த நேர்முக தேர்வை எதிர்க்கொள்ளும் மாணவர்கள் கட்டணமின்றி இலவசமாக பங்கேற்கலாம். இலவச நேர்முக தேர்வு பயிற்சியில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் interview@sankarias.in என்ற மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்