SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

16ம் தேதி காணும் பொங்கல் கொண்டாட்டம் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

2018-01-14@ 00:32:44

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு, 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஆண்டுேதாறும் தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் சிறப்பாக ெகாண்டாடப்படுகிறது. அன்று பொழுது போக்கு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இன்று முதல் பொங்கல் பண்டிகை களைகட்டுகிறது. 16ம்  தேதி  காணும் ெபாங்கல் கொண்டாடப்படுகிறது.காணும் பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் தங்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம், வண்டலூர் உயிரியில் பூங்கா போன்ற பொழுது  போக்கு இடங்களில் குவிவது வழக்கம். இதனால் சென்னையில் ெபாழுது போக்கு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொதுமக்கள் அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை போன்ற இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.  மெரினா கடற்கரையில் அதிகம் பொதுமக்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் கடலுக்குள் இறங்காமல் தடுக்கும் வகையில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா சமாதி வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும்  10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.  அதையும் தாண்டி பொது மக்கள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்கும் வகையில் மணலில் செல்லும் வாகனங்கள் மற்றும் குதிரை படை வீரர்கள்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும், மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் ரோந்து பணியிலும், மாறுவேடத்திலும் தீவிர கண்காணிப்பில்  ஈடுபடுகின்றனர். ரோந்து வாகனத்தில் மைக் அமைத்து அறிவிப்பு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும்  வகையில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
இதேபோன்று கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற பகுதிகளிலும் மக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு டிக்ெகட் கவுண்டர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பூங்கா போன்ற  பொழுது போக்கு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். எனவே காணும் பொங்கலை சிறப்பாக ெகாண்டாடும் வகையிலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவம் நடைெபறாமல் தடுக்கும்  வகையிலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

காவலர்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய கமிஷனர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் நேற்று காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.  இதில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், வடக்கு மண்டல  ஆணையர் ஜெயராமன், வடக்கு மண்டல இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தென் மண்டல போக்குவரத்து இணை ஆணையர் சுதாகரன், பூக்கடை உதவி  ஆணையர் ரவி, ஏழுகிணறு ஆய்வாளர் உக்கிரபாண்டி, பூக்கடை ஆய்வாளர் ரவி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், காவலர்கள் குடும்பத்தினர் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர். பின்னர், கோல போட்டி, உறியடி போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு  போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பரிசுகள் வழங்கினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக இந்த பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டிஜிபியும் தமிழகம்  முழுவதும் காவலர்களுடன் இணைந்து சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்.  ேமலும் பொங்கல் பண்டிகையின் போது எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் கொண்டாட வேண்டும்.  அனைவருக்கும் எங்கள் சார்பாக பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.




மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்