SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனி, புகை மூட்டத்தால் அடுத்தடுத்து விபத்து 4 பேர் பலி; 15 பேர் படுகாயம்

2018-01-14@ 00:32:43

சென்னை; அடுத்தடுத்து நடந்த விபத்துக்களில் 4பேர் பலியானார். 15 பேர் படுகாயமடைந்தனர்.போகி பண்டிகையையொட்டி வீட்டில் உள்ள கழிவு பொருட்களை எரித்ததால் ஏற்பட்ட புகைமண்டலம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக மதுராந்தகம் பகுதியில் நேற்று காலை கடும் புகை மூட்டம் காணப்பட்டது. எதிரில் வரும்  வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இதனால் பல இடங்களில் விபத்துக்கள் நடந்தது.மேல்மருவத்தூர் அடுத்த ரெட்டேரி பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று,  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.lதிண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி கோழி ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. மதுராந்தகம் அடுத்த பாக்கம் அருகே கடுமையான பனிப்பொழிவால் கோழி லாரி மெதுவாக வந்தது. அந்த நேரத்தில்  பின்னால் வந்த மினி லாரி, கோழி லாரி மீது மோதியது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பின்னால் 3 கார்களும் மோதியது. இந்த விபத்தில் 8 பெண்கள், 3 ஆண்கள் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.l விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் நேற்று காலை மதுராந்தகம் அடுத்த கருங்குழி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் போட்டு விட்டு வெளியே  வந்த லாரி மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் டிரைவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இதேபோல், மேல்மருவத்தூர் அடுத்த கடமலைபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (50). இவர், நேற்று முந்தினம் இரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பைக்கில் வந்தார். மதுராந்தகம் அருகே அரப்பேடு  என்ற கிராமத்துக்கு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த மற்றொரு பைக், பக்தவச்சலம் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.தகவறிந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  விசாரணையில், மற்றொரு பைக்கில் வந்தவர் சேலத்தை சேர்ந்த அப்துல் ரசாக் (25). என்பதும் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அச்சிறுப்பாக்கம்  போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் விழாவை கொண்டாட இருந்த நிலையில் அடுத்தடுத்து நடந்த இந்த விபரீத சம்பவம் அப்பகுதி மக்களிடையில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பனி மூட்டம், புகை மூட்டத்தால் திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையே தெரியவில்லை. நேற்று காலை திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் (தடம் எண் 201) வந்து கொண்டிருந்தது. திருவள்ளூர்  கனகவல்லிபுரம் அருகே வரும்போது, எதிரே வந்த மினி டெம்போ மீது நேருக்கு நேர் மோதியது. இதில், மினி டெம்போவின் டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல் (28) சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tokyo_olympic_2020

  டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னங்கள் வெளியீடு!!

 • kandhan_savadi11

  கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து : 2 பேர் பலி ; பலர் படுகாயம்

 • LosAngelesSuperMarketshot

  லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சூப்பர் மார்க்கெட் கடைக்குள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

 • boataccident_19dead

  பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

 • intel_beer_fes

  சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்