SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருத்துறைப்பூண்டி அருகே அறுவடை திருவிழாவில் புத்தரிசியால் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

2018-01-13@ 12:36:17

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை ஒட்டி அறுவடை திருவிழா நடைபெற்றது. இதில் அறுவடை செய்த நெல்லை அறுத்து புது அரிசியை கொண்டு பொங்கல் வைப்பது நமது கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் மிக்கது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கலுக்கு புது அரிசியில் பொங்கல் வைப்பது என்பது மக்களிடத்தில் இல்லாமல் போய்விட்டது. அதை நினைவுப்படுத்தும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அறுவடை திருவிழா நடத்தி அரிசியை எடுத்து உழவர்கள் தொழிலாளர்கள் பங்களிப்போடு சமத்துவ பொங்கல் திருவிழா திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் கிரியேட் நமது நெல்லை காப்போம் இயற்கை வேளாண் பயிற்சி மையத்தில் உள்ள வயல்வெளியில் நடைபெற்றது.

இது குறித்து கிரியேட் மேனேஜிங் டிரஸ்டி பொன்னம்பலம் பேசுகையில், நெல் என்பது நமது உணவு பொருள் மட்டுமல்ல, நம்முடைய கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் இவைகளை பிரதிபலிக்ககூடியது. பிறந்த 16ம் நாள் பெயர் சூட்டும் விழாவின் போது காப்பரிசியாக உருவாகும் அரிசி, இல்லங்களில் நடைபெறும் அனைத்து மங்களகரமான காரியங்களிலும் இடம் பெறும். இந்த பாரம்பரியம் நெல்லுக்கு மட்டுமே உரியது. அதனால் கிரியேட் நமது நெல்லை காப்போம் பாரம்பரிய நெல் ரங்ககளை மீட்டெடுத்து மறு உற்பத்தி செய்து உழவர்களிடையே கைமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கிரியேட் பண்ணையில் மட்டும் இந்த ஆண்டு 41 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் விதை  உற்பத்திக்காக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் விழாவை உழவர்கள் தொழிலாளர்களோடு இணைந்து விழாவாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த பொங்கல் விழாவை அறுவடை செய்து புது அரிசியில் பொங்கல் செய்து சூரிய பகவானை வழிபாடு செய்துள்ளோம் என்றார். விழாவில் கிரியேட் நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன், களப்பணியாளர் உதயக்குமார், அலுவலக மேலாளர் கணேசன், பண்ணை மேலாளர் பன்னீர்செல்வம், மிராசுதார்கள் பாலசுப்ரமணியன், ஆகோ ராஜேந்திரன், வேலூர் ஜெயானாந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். தொழிலாளர்கள் நாகூரான், சரோஜா, வடுவம்மாள் ஆகியோர்களை கவுரவிக்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bus_fire_kazakhstan

  கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

 • london_light_festival

  குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

 • kalaivanar_arangil11

  கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

 • popecile

  போப் ஆண்டவர் தென் அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம்

 • prakash_IIT_chennai

  இந்தியாவில் முதல் முறையாக பல்கலைக்கழகத்தால் இயக்கப்படும் ஆராய்ச்சி பூங்கா: சென்னை ஐஐடியில் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்