SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாவரவியல் பூங்காவில் பிக்கோனியா மலர் நாற்று உற்பத்தி தீவிரம்

2018-01-13@ 12:34:45

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பிக்கோனியா மலர் நாற்றுக்கள் உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்வது வழக்கம். பொதுவாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சிறிய மலர்களான பிக்கோனியா மலர்கள் அதிகளவு காணப்படும்.

இந்த மலர்கள் 5 மாதத்திற்கு பின் பூக்க கூடியவை. எனவே, தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள நர்சரிகளில் பிகோனியா நாற்று உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். பல ஆயிரம் மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அந்த நாற்றுக்களை தாவரவியல் பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் நடவு செய்யும் பணிகளும் துவங்கியுள்ளது. மேலும், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் மாளிகை, மரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா, சிம்ஸ் பூங்காக்களிலும் நாற்று நடவு பணிகளுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்