SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பென்னாகரம் பகுதியில் அரிவாள், கத்தி தயாரிப்பில் வட மாநிலத்தினர் மும்முரம்

2018-01-13@ 12:33:33

பென்னாகரம்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள், பென்னாகரம் பகுதியில் முகாமிட்டு அரிவாள், கத்தி, கோடாரி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் லம்பாடி சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் நாடோடிகளாக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை செய்து பிழைப்பு நடத்துகின்றனர். இந்நிலையில், பென்னாகரம்  ஒகேனக்கல் சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிலர், குடும்பத்தினருடன் கூடாரம் அமைத்து தங்கியிருக்கின்றனர். அவர்கள் அரிவாள், கோடாரி, கத்தி போன்ற ஆயுதங்களை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். பெண்கள், சிறுவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்க்கின்றனர். அதிகாலை முதலே அரிவாள், கத்தி தயாரிப்பில் ஈடுபடும் அந்த மக்களிடம் விவசாயிகளும் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இது குறித்து லம்பாடி சமூகத்தினர் கூறியதாவது: எங்கள் பிழைப்பே ஊர், ஊராக சென்று அரிவாள், கோடாரி, கத்தி போன்றவற்றை அங்கேயே தயாரித்து, உடனுக்குடன் விற்பனை செய்வது தான். உழைத்து பிழைப்பதை தான் நாங்கள் உண்மையாக கொண்டுள்ளோம். மற்றபடி சினிமாவில் வருவது போன்றவை பற்றியெல்லாம் எங்களுக்கு தெரியாது. அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு குழந்தைகளுடன் வெயில், பனி பார்க்காமல் உழைத்து வருகிறோம். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் உள்ள மக்கள், எங்கள் போன்றவர்களிடம் பொருட்களை தயக்கமின்றி வாங்குகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்