SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிசான பருவ சாகுபடிக்கு வடக்கு பச்சையாறு அணை திறப்பு

2018-01-13@ 12:32:48

நெல்லை: பிசான பருவ நெல் சாகுபடிக்கு வடக்கு பச்சையாறு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் 9 ஆயிரத்து 592 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா, வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான பருவ நெல் சாகுபடிக்கு எம்பிக்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்தியானந்த் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவுப்படி, வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் பாசன பரப்பு ஆயக்கட்டான மடத்துக்கால், நான்குநேரியன் கால்வாய் மற்றும் பச்சையாற்றின் குறுக்கே அமைந்துள்ள முதல் ஐந்து அணைக்கட்டுகள் மூலம் பாசனம் பெறும் 9 ஆயிரத்து 592.91 ஏக்கர் நிலங்களுக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். தினமும் வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து பிசான சாகுபடிக்கு  தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்தின் மூலம் பத்தை, மஞ்சுவிளை, களக்காடு, பத்மநேரி, வடமலை சமுத்திரம், சூரன்குடி, கடம்போடுவாழ்வு, நான்குநேரி, கரந்தாநேரி, மறுகால்குறிச்சி, பட்டர்புரம், இறைப்புவாரி, பரப்பாடி, விஜயநாராயணம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும். நீர்தேக்கத்தில் வரும் நாட்களில் மழை பொய்த்து எதிர்பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லையெனில் இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும்.  எனவே, பொதுமக்கள், விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் விநியோகப் பணியில் பொதுப்பணித்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார், பொதுப்பணித்துறை சிற்றாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் ஜெயபாலன், உதவி செயற்பொறியாளர் மதன சுதாகரன், உதவி பொறியாளர்கள் பாஸ்கர், மூர்த்தி, வேளாண்மை இணை இயக்குநர் பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, நாங்குநேரி தாசில்தார் ஆதிநாராயணன், பாளை பஞ். யூனியன் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் முத்துகுட்டி பாண்டியன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-07-2018

  22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2018

  21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • DryingClothingfestival

  சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

 • unmanedbookshopchina

  சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

 • newyork_steam_explosion

  நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்