SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமலாக்கத்துறை சோதனை திட்டமிட்ட நாடகம் : ப.சிதம்பரம் சாடல்

2018-01-13@ 12:26:19

புதுடெல்லி: அமலாக்கத்துறையின் சோதனை திட்டமிட்ட நாடகம் இந்த நாடகத்தை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்துள்ளார். சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை. மேலும் சிபிஐ எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என அமலாக்கத்துறை சோதனை குறித்து ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் எந்த அமைப்பினாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. கார்த்தி சிதம்பரம் வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

அமலாக்கத்துறை விசாரிக்க எந்த முகாந்திரம் இல்லை என ப.சிதம்பரம் கூறியுள்ளார். நான் எதிர்பார்த்தபடியே சென்னையில் கார்த்தி வீட்டில் சோதனை நடத்தினர். சோதனைக்கு எனது எதிர்ப்பை தெரிவித்துள்ளேன். ஒரு சில ஆவணங்களை சோதனையின்போது எடுத்து சென்றுள்ளனர் என ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார். ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இதுவரை 3 முறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார். கார்த்தி சிதம்பரம் இங்கே வசிக்கிறார் என நினைத்து, அமலாக்கத் துறையினர் என் வீட்டில் சோதனையிட்டனர், பின்னர் மன்னிப்பு கேட்டு திரும்பி சென்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்