SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரம்

2018-01-13@ 12:20:26

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய கட்டுப்பாடாக சிசிடிவி கண்காணிப்பு அவசியம் என்ற கட்டுப்பாடும் வதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. தை மாதம் முதல் தேதியில் நடைபெறவுள்ள இப்போட்டிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற இடத்தில் தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்கான களம் தயாராகி வருகிறது.

பல்வேறு போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். மதுரையில் இவ்வருடத்தில் முதன்முறையாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் அமைப்பது, பேரிகார்டுகள் அமைப்பது என பல்வேறு கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிசிடிவி கேமரா கண்டிப்பாக பொருத்தபட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அதனை பொருத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 5 இடங்களுக்கு மேல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போட்டியை கண்காணிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்