SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் கொத்து, காப்புக்கட்டு பூ, செங்கரும்பு விற்பனைக்கு குவிப்பு

2018-01-13@ 12:04:28

சேலம்: சேலம் கடைவீதிகளில் செங்கரும்பு, மஞ்சள் கொத்து, காப்புக்கட்டு பூ உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை கொண்டாடப்படுகிறது. உழவுக்கும், தொழிலுக்கும் பெருமை சேர்க்கும் இந்த விழாவின் துவக்கமாக போகிப்பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. விவசாயிகள், பொதுமக்கள் வீட்டின் முற்றத்தில் மஞ்சள் கொத்து வைத்து, பன்னப்பூ, ஆவாரம்பூ, பூலாம்பூ மற்றும் வேப்பிலை அடங்கிய காப்பு கட்டு வீட்டின் தாழ்வாரத்தில் கட்டுவது வாடிக்கை.  சேலம் கடைவீதி, பட்டைகோயில், அம்மாப்பேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி, குகை, அஸ்தம்பட்டி, ஏற்காடு மெயின்ரோடு, குரங்குச்சாவடி, ஆனந்தா, வ.உ.சி., மார்க்கெட் முக்கிய பகுதிகளில் கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனை கடைகள் முளைத்துள்ளன.

இதே போல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் கடையமைத்து விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் இவற்றை வாங்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஒரு ஜோடி கரும்பு ரூ.60 முதல் ரூ.80 எனவும், மஞ்சள் கொத்து ஒரு ஜோடி ரூ.40 முதல் ரூ.50 எனவும், காப்பு கட்டு பூ ரூ.10 எனவும், கலர் கோலப்பவுடர் ரூ.5 முதல் ரூ.10 எனவும், மண்பானை ரூ.50 முதல் ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது. போகி பண்டிகையையொட்டி படையலுக்கு தேவையான வாழைப்பழம், காய்கறி, தேங்காய், வெற்றிலை, முருங்கைக்கீரை, பச்சை அவரை, மஞ்சள், குங்குமம், கற்பூரம் உள்ளிட்ட பூஜைப்பொருட்கள், சேலம் கடை வீதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்