SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏரியில் வீசப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு : 2 ஆண்டுகளுக்கு முன் திருட்டு போனது

2018-01-13@ 12:03:41

போளூர்: போளூர் அருகே ஏரியில் கோணிப்பையில் மூட்டையாக கட்டி வீசப்பட்டிருந்த ஐம்பொன் அம்மன் சிலை மீட்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே கூர் ஏரி உள்ளது. இங்கு போளூர் நடேசன் தெருவை சேர்ந்த முத்துக்குமரன், மணிகண்டன், பிரபாகரன், பெருமாள் ஆகியோர் நேற்று அதிகாலை மீன் பிடிக்க சென்றனர். அங்குள்ள படிக்கட்டில் இறங்கியபோது முத்துக்குமரன் காலில் கோணிப்பையால் கட்டிய நிலையில் ஏதோ பொருள் தட்டுப்பட்டது.  இதனால் சந்தேகமடைந்த அவர், அதனை எடுத்து பிரித்து பார்த்தபோது ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, தாசில்தார் பாலாஜி, இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தாசில்தார் மற்றும் இன்ஸ்பெக்டர், விரைந்து சென்று சிலையை மீட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ஏரியில் சிலை கிடைத்த விவகாரம் போளூர் மற்றும் பக்கத்து கிராமங்களில் காட்டுத்தீ போல் தகவல் பரவியது. இதையடுத்து போளூர் அருகே வசூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் பூசாரி பழனி மற்றும் கிராமமக்கள் தாலுகா அலுவலகம் வந்தனர். அங்கிருந்த சிலையை பார்த்த அவர்கள், அது தங்கள் ஊரில் உள்ள செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலை எனவும், இரண்டரை அடி உயரம், 45 கிலோ எடைகொண்ட அந்த சிலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருட்டுப்போனதாக தெரிவித்து உறுதிப்படுத்தினர்.

மேலும், இந்தசிலை வாங்கியதற்கான ரசீது மற்றும் சிலைக்கான கிரீடம் தங்களிடம் உள்ளதாகவும் அதை பொருத்தி சிலை எங்கள் கோயிலுக்கு சொந்தமானதுதான் என உறுதி செய்வோம் என தெரிவித்தனர். இந்த சிலையின் தற்போதைய மதிப்பு 1 லட்சம் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், சிலையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள் யார்? எதற்காக ஏரியில் வீசி சென்றனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஐம்பொன் அம்மன் சிலை கிடைத்த தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வந்து சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்துவார் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இந்த கூர் ஏரியில் மேலும் ஏதாவது சிலைகள் உள்ளதா என கிராமமக்கள் மற்றும் வருவாய்த்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bus_fire_kazakhstan

  கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

 • london_light_festival

  குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

 • kalaivanar_arangil11

  கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

 • popecile

  போப் ஆண்டவர் தென் அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம்

 • prakash_IIT_chennai

  இந்தியாவில் முதல் முறையாக பல்கலைக்கழகத்தால் இயக்கப்படும் ஆராய்ச்சி பூங்கா: சென்னை ஐஐடியில் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்