SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வண்டலூர், சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் விலங்குகள் பராமரிப்புக்கு ஸ்பான்சர் முறை அமல்

2018-01-13@ 12:02:49

சேலம்: சென்னை வண்டலூர், சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளை பராமரிக்க, ஸ்பான்சர் முறை அமல்படுத்தப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வன உயிரியல் பூங்காக்களில் விலங்குகள், பறவைகளை வைத்து பராமரித்து வருகின்றனர். இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ ஏற்பாடு செய்துள்ளனர். இதில், மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்குகளை பராமரிக்க, கர்நாடக வனத்துறை ஸ்பான்சர் முறையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, அங்குள்ள விலங்குகளுக்கு தேவையான உணவுகளை, குறிப்பிட்ட காலத்திற்கு பொதுமக்கள் வாங்கிக் கொடுத்து பராமரித்து வருகின்றனர். வனத்துறை மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

இதேபோல், தமிழகத்தில் உள்ள வன உயிரியல் பூங்காவில் விலங்குகளை பராமரிக்கவும், ஸ்பான்சர் முறையை அமல்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்கட்டமாக சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா ஆகியவற்றில் இருக்கும் விலங்குகளை பராமரிக்க, ஸ்பான்சர் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் புள்ளி மான், கடமான், நீர் பறவை, மயில், வெள்ளை மயில், முதலை, நரி, முயல், ஆமை, கிளி, மலைப்பாம்பு, குரங்கு, உடும்பு, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட வண்ணப்பறவைகள், மதுரை ஆண்டாள் யானை ஆகியவை இருக்கின்றன.

இந்த விலங்குகளையும், பறவைகளையும் வனத்துறை நிர்வாகம் பராமரித்து வருகிறது. தற்போது, பொதுமக்களின் பங்களிப்புடன் (ஸ்பான்சர்) மூலம் பராமரிக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வொரு விலங்கிற்கும் குறிப்பிட்ட காலத்திற்கு (ஒரு மாதம், 6 மாதம் என) தேவையான உணவு வகைகளை, ஸ்பான்சர் செய்யும் நபர் நேரடியாக வாங்கி, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம். அல்லது ஸ்பான்சர் செய்யப்படுகின்ற விலங்கிற்கு தேவையான உணவினை வாங்கிக்கொள்ள உரிய பணத்தை வனத்துறையிடம் கொடுக்கலாம். யார், யார், எந்தெந்த விலங்குகளை ஸ்பான்சர் செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தை, அந்த விலங்கை அடைத்து வைத்திருக்கும் கூண்டில் எழுதி தொங்க விட்டிருப்பார்கள்.

இதுபற்றி மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் கூறுகையில், ‘சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க ஸ்பான்சர் முறையை அமல்படுத்தியுள்ளோம். சில விலங்குகளுக்கு ஸ்பான்சர் கிடைத்துள்ளனர். அவர்களின் விவரத்தை இன்னும் ஓரிரு நாளில் தெரிவிக்க உள்ளோம். மக்கள் தரப்பில் விலங்குகள் மற்றும் பறவைகளை பராமரிக்க விரும்பினால், அவர்கள் மாவட்ட வன அலுவலகத்தை நாடலாம்,’ என்றார்.

உணவின்றி தவிக்கும் விலங்குகள்

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள புள்ளிமான், கடமான், முதலை உள்ளிட்ட விலங்குகளுக்கு, வனத்துறை போதிய உணவினை அளிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. பூங்காவிற்கு வரும் மக்கள், விலங்குகள் அருகே சென்றவுடன் ஏதாவது தருவார்களா? என ஏங்கி தவிப்பதை காண முடிகிறது. முன்பெல்லாம் சுற்றுலா வாசிகளை பார்த்தவுடன் விலங்குகள் ஓட்டம் பிடிக்கும். ஆனால், தற்போது அவர்களின் அருகே வந்து கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களை கேட்டு நிற்கிறது. புள்ளி மான், கடமான் ஆகியவை வயிறு வற்றி, மிகவும் சோர்வாக காணப்படுகின்றன. இதனால், வனவிலங்குகளுக்கு உரிய முறையில் உணவு அளிக்க முடியாமல் தான், தற்போது ஸ்பான்சர் முறைக்கு வந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bus_fire_kazakhstan

    கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

  • london_light_festival

    குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

  • kalaivanar_arangil11

    கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

  • popecile

    போப் ஆண்டவர் தென் அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம்

  • prakash_IIT_chennai

    இந்தியாவில் முதல் முறையாக பல்கலைக்கழகத்தால் இயக்கப்படும் ஆராய்ச்சி பூங்கா: சென்னை ஐஐடியில் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்