SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடையநல்லூர் பள்ளியில் பொங்கல் விழா : வெளிநாட்டினர் பங்கேற்பு

2018-01-13@ 12:01:54

தென்காசி: கடையநல்லூர் பெஸ்ட் இன்டர் நேஷனல் பள்ளி மற்றும் ஜூனியர் சேம்பர் ஆப் இன்டியா பெஸ்ட் சென்டனரி குயின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் யூசுப் ராஜா தலைமை வகித்தார். ஜே.சி.ஐ. கடையநல்லூர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள இசக்கிமுத்து, முன்னாள் தலைவர் முகமது உவைஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை சேர்மத்தாய் வாசன் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் ஆஸ்திரியா, நெதர்லாந்து நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். அமர் சேவா சங்கத்தின் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

ஏற்பாடுகளை ஜே.சி.ஐ நிர்வாகிகள் ராஜகோபால், ஆண்டனி, ரஹீம், பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் செய்திருந்தனர். பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ் கலாசாரம் குறித்து ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘தமிழ் கலாசாரம்  மற்றும் பொங்கல் பண்டிகை எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஐந்தருவியில் உள்ள ஓம் பிரணவா ஆசிரமத்திற்கு நாங்கள் வருகை தந்தோம். அங்கிருந்த போது பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியை கண்டு ரசிக்க விரும்பினோம். அப்போது தான் இந்த வாய்ப்பு கிடைத்தது’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்