SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புனலூர் அகல ரயில் பாதை பணிகள் நிறைவு: ஏழரை ஆண்டுகளுக்கு பின் விரைவில் ரயில் சேவை

2018-01-13@ 11:58:09

நியூ ஆரியங்காவு: தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் வழித்தடமான புனலூர் அகல ரயில் பாதை பணி முடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழரை ஆண்டுகளுக்கு பின் இந்த வழித்தடத்தில் ரயில இயக்கப்படவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெறவுள்ளது. தமிழகம்-கேரளாவை இணைக்கும் 112 ஆண்டுகள் பழமையான வழித்தடம் தான் இந்த செங்கோட்டை-புனலூர் ரயில்தடம். இந்த ரயில்தடத்தில் கடந்த 2010ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக சுமார் 300 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இப்பகுதியில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன் காரணமாக செங்கோட்டை-புனலூர் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்து. கடந்த ஏழரை ஆண்டுகளாக இப்பணிகள் நடைபெற்று வந்தன. குறிப்பாக இந்த ரயில் மார்க்கத்தில் 5 குகைகளும், 23 பெரிய பாலங்களும், 144 வலைவுகள் மற்றும் 178 சிறிய பாலங்கள் என அனைத்து இடங்களிலும் பணிகள் நடைபெற்று வந்தன. எனவே 3 ஆண்டுகளில் முடிவடைய வேண்டிய பணிகள் ஏழரை ஆண்டுகளாக நடைபெற்றது. இந்நிலையில், செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, புது ஆரியங்காவு இடையே, 19 கிலோமீட்டர் தூர பாதையில், பாலங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

ஏற்கனவே 5 குகை பாதைகள் உள்ள இந்தப் பாதையில், தற்போது, ஆறாவதாக, 165 மீட்டர் நீளத்திற்கு, 70 கோடி ரூபாயில் ஒரு புதிய குகை பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தத் தடத்தில் இன்று அதிவேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் செங்கோட்டை, புனலூர் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்