SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவில் சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 8 பேர் உயிரிழப்பு

2018-01-13@ 11:10:17

ஹாசன்: கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து நேற்றிரவு தர்மசாலாவுக்கு புறப்பட்டு சென்ற கர்நாடக அரசு சொகுசு பேருந்து ஒன்று அதிகாலை ஹாசன் அருகே நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியாகினர். இதில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

மேலும் 23 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஹாசன் நகர காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஹாசன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்து காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது. பேருந்தில் பயணம் மேற்கொண்ட 43 பேரின் குடும்பத்தினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்