SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருநாவுக்கரசரை மாற்றுவது உறுதி; தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் : ஈவிகேஎஸ்.இளங்கோவன்

2018-01-13@ 01:29:54

சென்னை: திருநாவுக்கரசரை மாற்றுவது உறுதியாகிவிட்டதால் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். மத்திய சென்னை மாவட்ட அண்ணா நகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா செனாய் நகரில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பின் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி வர உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைமைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். தற்போதைய தலைவரை மாற்றுவது உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதுமே தைரியமாக இருங்கள்.

உழைப்புக்கு எப்போதும் மரியாதை உண்டு. புதிய தலைவர் யார் என்பதை ராகுல்காந்திதான் முடிவு செய்வார். அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்ததும் மாநில தலைவர்கள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது. தலைவர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்பதை எல்லாம் சொல்ல முடியாது. அது எனக்கு தெரியவும் தெரியாது. தற்போதைய சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியில் கட்சி பணிகள் எதுவும் சரியாக நடைபெறவில்லை. எனவே, புதிய தலைமை என்பதை நல்லது என்றே நினைக்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்