SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேமிலா ஜியார்ஜியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார் ஏஞ்சலிக் கெர்பர்

2018-01-13@ 01:08:29

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்ப தகுதி பெற்றார். அரை இறுதியில் தகுதிநிலை வீராங்கனையான இத்தாலியின் கேமிலா ஜியார்ஜியுடன் நேற்று மோதிய கெர்பர் 6-2, 6-3 என நேர் செட்களில் எளிதாக வென்று 2வது முறையா சிட்னி தொடரின் பைனலுக்கு முன்னேறினார். 2014ம் ஆண்டு சிட்னி தொடரில் பைனல் வரை முன்னேறிய கெர்பர், ஸ்வெடனா பிரான்கோவாவிடம் தோற்று 2வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னணி வீராங்கனைகள் ஸ்லோனி ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), பெத்ரா குவித்தோவா (செக் குடியரசு), அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா (போலந்து) ஆகியோரை தோல்வியடையச் செய்ததுடன், தகுதிச் சுற்றில் இருந்து அரை இறுதி வரை ஒரு செட்டை கூட இழக்காமல் இருந்த கேமிலாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சக வீராங்கனை டாரியா காவ்ரிலோவாவை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் ஏஞ்சலிக் கெர்பர் - ஆஷ்லி பார்தி மோதுகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்