SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6 நாடுகளில் ஒரே நாளில் 11 ஷோரூம் திறந்தது மலபார் கோல்டு

2018-01-13@ 01:01:02

சென்னை: மலபார் கோல்டு நிறுவனம் நேற்று 6 நாடுகளில் 11 ஷோரூம்களை திறந்துள்ளது. உலக அளவில் மிகப்பெரிய நகைக்கடைகளில் ஒன்றான மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனம் நேற்று ஒரே நாளில் ஐக்கிய அரபு நாடுகளான கத்தார், ஓமன் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இந்தியாவில் தெலங்கானாவில் உள்ள வாரங்கல் உட்பட 6 நாடுகளில் 11 ஷோரூம்களை ஒரே நாளில் திறந்துள்ளது. இதன்மூலம் உலகம் முழுவதும் 208 ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. உலகளாவிய சந்தையில் நாங்கள் பரவலான அங்கீகாரத்தைப் பெறுகிறோம்.

இதுவே உலகளவில் விரிவாக்கம் செய்ய முக்கிய காரணம் என மலபார் குழும தலைவர் எம்.பி. அஹமது தெரிவித்தார். இந்த ஆண்டு 50 ஷோரூம்களை மலபார் கோல்டு திறக்க உள்ளதாக மலபார் கோல்டு - டைமண்ட்ஸ் சர்வதேச செயல்பாடுகளின் நிர்வாக இயக்குநர் ஷாம்லால் அஹமது கூறினார்.‘இந்த நாட்டில் அதிக ஷோரூம்கள் மற்றும் உற்பத்தி பிரிவுகளை அமைத்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கி மேக் இன் இந்தியா’ முயற்சியை மேம்படுத்துவதாக மலபார் கோல்டு - டைமண்ட்ஸ், இந்திய செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனரான ஓ அஷெர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்