SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஞ்சள் செடி பொங்கலுக்கு ரெடி

2018-01-13@ 00:57:09

பரமக்குடி: பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்ட மஞ்சள் செடிகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம்பெறும் மஞ்சள் செடிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆற்றுப்படுகை ஓரங்களில் பயிரிடப்படும். குறிப்பாக பரமக்குடி மஞ்சள்பட்டினம் பகுதியில் விளையும் மஞ்சள் செடிகள், அறுவடை முடிந்து சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். கடந்த ஆண்டுகளில் 25 ஏக்கருக்கு மேல் மஞ்சள் விவசாயம் நடந்தது. ஆனால் நடப்பாண்டு பொங்கல் விழா வரும் 14ம் தேதி வரும் நிலையில், மஞ்சள்பட்டிணம் பகுதியில் சுமார் 10 ஏக்கர் அளவில் தான் மஞ்சள் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு 12 லட்சம் மஞ்சள் செடிகள் அறுவடை செய்யப்படும் நிலையில், இந்தாண்டு நோய் தாக்குதலால் 2 லட்சம் செடிகள் மட்டுமே உள்ளது. போதிய தண்ணீர் வசதியில்லாமல், நோய் தாக்குதல் அதிகரித்து மஞ்சள் செடிகள் மகசூல் சரிந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயி பாண்டி கூறுகையில், ‘‘கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மஞ்சள் விளைச்சல் 10 மடங்கு குறைந்துள்ளது.

நோய் தாக்குதல் அதிகரித்து விட்டது. பருவமழை, வைகை ஆற்று தண்ணீர் இல்லாததால் கஷ்டப்பட்டு காப்பாற்றிய மஞ்சளை, பொங்கல் விற்பனைக்கு கொண்டு செல்ல காத்திருக்கிறோம். ஏற்கனவே மஞ்சள் விளைச்சல் நிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவரும் நிலையில், மஞ்சள் விவசாயம் இப்பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்