SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவு பொருட்கள் விலை உயர்வால் சில்லரை விலை பண வீக்கம் அதிகரிப்பு

2018-01-13@ 00:56:23

புதுடெல்லி: சில்லரை விலை பண வீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் 5.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.  சில்லரை விலை பண வீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் 4.88 சதவீதமாகவும், 2016ம் ஆண்டு டிசம்பரில் 3.41 சதவீதமாகவும் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதத்தில் இது 5.21 சதவீதமாக உயர்ந்து விட்டது. உணவு பொருட்கள், முட்டை, காய்கறி விலை உயர்வே இதற்கு காரணம்.   அதேநேரத்தில், பருப்பு வகைகள் தானியங்கள் விலை ஓரளவு குறைந்துள்ளது.  

உணவு பொருட்களுக்கான பண வீக்கம் முந்தைய மாதத்தில் 4.42 சதவீதமாக இருந்தது, கடந்த மாதம் 4.96 சதவீதமாக உயர்ந்து விட்டது. ரிசர்வ் வங்கி பண வீக்கத்தை 4 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்திருந்தது. பண வீக்கத்தை குறைக்கும் நோக்கில் கடன் வட்டி குறைப்பதில் கெடுபிடி காட்டி வந்தது. தற்போது பண வீக்கம் அதிகரித்துள்ளதால் ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன் வட்டியை குறைக்க வாய்ப்புகள் இல்லை என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்