SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விஜயசங்கர் பாஜவிலிருந்து விலகுகிறார் : காங்கிரசில் இணைய முடிவு

2018-01-13@ 00:32:05

மைசூரு : பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி இம்மாதம் 19ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக முன்னாள் வனத்துறை அமைச்சர் சி.எச்.விஜயசங்கர் தெரிவித்தார். கர்நாடக மாநில பாஜவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சி.எச்.விஜயசங்கர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இணைந்து பல பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 1994 மற்றும் 1998ல் நடந்த பேரவை தேர்தலில் மைசூரு மாவட்டம், உன்சூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1999 மற்றும் 2004 ஆகிய தேர்தல்களில் மைசூரு மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2010 முதல் 2016 வரை கர்நாடக சட்டமேலவை உறுப்பினராக இருந்ததுடன் பாஜ ஆட்சியில் வனம் மற்றும் சு்ற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். மைசூரு மாவட்ட பாஜவில் பலமான தலைவராக இருக்கும் அவருக்கும், முன்னாள் அமைச்சர் எஸ்.ஏ. ராமதாசுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாஜவை விட்டு விலக விஜயசங்கர் முடிவு செய்துள்ளார். இதை கடந்த மாதம் அவர் பகிரங்கமாக தெரிவித்தார்.

இந்நிலையி–்ல் நேற்று மைசூரு ராமகிருஷ்ணநகரில் உள்ள முதல்வர் சித்தராமையா வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசியபின் செய்தியாளர்களிடம் விஜயசங்கர் கூறுகையில், பாஜவின் வளர்ச்சிக்காக நான் என்னை முழுமையாக அர்ப்பணித்தேன். ஆனால் எனது உழைப்பை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. சிலர் எனக்கு எதிராக பேசியபோது, கட்சி தலைமை எனக்கு ஆதரவாக செயல்படவில்லை. இனியும் கட்சியில் இருப்பது எனது சுயமரியாதைக்கு ஏற்றதல்ல என்ற முடிவுக்கு வந்த நான் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்தேன். இது தொடர்பாக கட்சி தலைவர்களுடன் பேசியபோது அவர்கள் ஒப்புதல் அளித்தனர். வரும் 19ம் தேதி பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர், முதல்வர் சித்தராமையா, கட்சி மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் நானும், எனது ஆதரவாளர்களும் காங்கிரசில் இணைகிறோம் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bus_fire_kazakhstan

  கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

 • london_light_festival

  குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

 • kalaivanar_arangil11

  கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

 • popecile

  போப் ஆண்டவர் தென் அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம்

 • prakash_IIT_chennai

  இந்தியாவில் முதல் முறையாக பல்கலைக்கழகத்தால் இயக்கப்படும் ஆராய்ச்சி பூங்கா: சென்னை ஐஐடியில் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்