SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டசபையில் குட்கா வழக்கு பற்றி பேச அனுமதி மறுப்பு: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

2018-01-13@ 00:15:06

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘குட்கா வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது வருமானவரித் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்’’ என்று தனது பேச்சை தொடங்கினார்.  அப்போது, சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, நீதிமன்றத்தில் உள்ளது குறித்து சட்டசபையில் பேச முடியாது என்று அனுமதி மறுத்தார். இதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அவைக்கு வெளியே மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக சார்பில், குட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திட வேண்டுமென்று நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த வழக்கு சம்பந்தமாக, வருமான வரித்துறையினர் ஒரு அபிடவிட்டை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். அது, எங்களுடைய வழக்கறிஞர் வில்சனிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  அந்த பிரமாணப் பத்திரத்தில், குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும், போலீஸ் கமிஷனருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பது உண்மை என்றும் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதை யாரோ ரோட்டில் போய், வருபவர்கள் சொல்லவில்லை, வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அன்றைக்கு டிஜிபியாக இருந்த அசோக்குமாரின் ஒரிஜினல் கோப்புகளையும், அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியபோது எடுத்திருக்கிறார்கள். அவையும் இன்றைக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை இவ்வளவு பகிங்கரமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் குட்கா விவகாரத்தில் நடந்த உண்மைகளை தாக்கல் செய்துள்ள நிலையில், அன்றைக்கு போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன், இப்போது பதவி உயர்வு பெற்று, டிஜிபி பொறுப்பில் இருக்கிறார்.

 எனவே, அவரை உடனடியாக டிஜிபி பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதேபோல, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் விலகவில்லை என்றால், முதல்வர் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இந்தப் பிரச்னையை, இன்று சட்டமன்றத்தின் நேரமில்லா நேரத்தில் நாங்கள் எழுப்பினோம். “அது நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதால் அதுபற்றி பேசக்கூடாது”, என்று சபாநாயகர் சொல்லி, எங்களை பேசவிடாமல் தடுத்துவிட்டார். எனவே, அதை கண்டிக்கின்ற வகையில் திமுகவை சேர்ந்த நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர்களை தேடும் பணி நடக்கிறதா?
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஒரு பேட்டியில் கூறும் போது, ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால் முதல்வரோ தேடுகிறோம் என்று கூறுகிறார். காணாமல் போன மீனவர்களை தேடும் பணி எந்த நிலையில் உள்ளது? முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நமது மீனவர்கள் தாங்களே முன்வந்து தேடுதல் பணியில் ஈடுபடுவதாக தெரிவித்ததின் பேரில் அரசு அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் வசதிகளையும் செய்து கொண்டு தேடிவருகிறோம். தேடுதல் பணி மேலும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bus_fire_kazakhstan

  கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

 • london_light_festival

  குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

 • kalaivanar_arangil11

  கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

 • popecile

  போப் ஆண்டவர் தென் அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம்

 • prakash_IIT_chennai

  இந்தியாவில் முதல் முறையாக பல்கலைக்கழகத்தால் இயக்கப்படும் ஆராய்ச்சி பூங்கா: சென்னை ஐஐடியில் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்