SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருட்டு வழக்கில் 5 பேர் கைது

2017-12-08@ 00:56:16

பெங்களூரு : பெங்களூரு விஜயநகர் போலீஸ் சரகத்தில் நடந்த இருவேறு திருட்டு வழக்கு தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் பெங்களூரு ரங்கநாதபுராவை சேர்ந்த ராஜு (34), சோலூர்பாளையாவை சேர்ந்த கணேஷ் (34), விஜயநகரை சேர்ந்த கவிதா (29), மைசூருவை சேர்ந்த கமலம்மா (55), உத்திரஹள்ளி மெயின் ரோட்டை சேர்ந்த ரவி (34) என்று தெரியவந்தது.

இதில் ராஜு, கணேஷின் கைது நடவடிக்கை மூலம் பெங்களூரு விஜயநகரில் 15, ராஜாஜிநகரில் 2, சந்திரா லே அவுட்டில் 1, பேட்டரஹள்ளியில் 1 திருட்டு வழக்கிற்கு தீர்வு கிடைத்துள்ளது.  இதேபோன்று கவிதா, கமலம்மா, ரவி ஆகியோரின் கைது நடவடிக்கையால் ஒரு திருட்டு வழக்கிற்கு தீர்வு கிடைத்துள்ளது. மொத்தம் 20 வழக்கிற்கு தீர்வு காணப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 5 பேரிடமிருந்து ரூ.16.42 லட்சம் மதிப்பிலான 600 கிராம் தங்கநகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்