SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேன்கனிக்கோட்டை பகுதியில் ராகி சாகுபடி காடுகளுக்கு படையெடுக்கும் யானைகள்

2017-12-08@ 00:55:25

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் அங்குள்ள ராகி சாகுபடி செய்துள்ள காடுகளை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வட்டவடிவு பாறை பகுதியில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டுள்ள 70 யானைகள், ராகி, அவரை, துவரை, சோளம், தக்காளி உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர், யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் இப்பகுதியில் ராகி பயிர்களை ருசி பார்த்த யானைகள், இந்த இடத்தைவிட்டு அகலுவதில்லை. தொடர்ந்து போக்குகாட்டி வருகிறது.

நேற்றுமுன்தினம் இரவு காடுலக்கசந்திரம், மேகலகவுண்டனூர், திம்மசந்திரம், கலகோபசந்திரம், ஜார்கலட்டி, மாரசந்திரம் ஆகிய பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தியது. கலகோபசந்திரம் கிராமத்தில், 5 ஏக்கர் பரப்பளவிலான ராகி பயிரையும், துவரை பயிரையும், தக்காளி தோட்டத்தையும், யானைகள் துவம்சம் செய்துள்ளன. இதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் தங்களது விளைநிலங்களுக்குள் செல்லவும் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். விவசாயி நாராயணரெட்டி கூறுகையில், ‘‘கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில், ரூ.10 ஆயிரம் செலவு செய்து 25 ஆட்களை வைத்து ராகி பயிர்களை அறுவடை செய்து வைத்திருந்ேதாம். ஆனால் 70 யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து, பயிர்களை காலால் மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்துள்ளன. ஆகவே சேதமடைந்த பயிர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். யானை கூட்டத்தை உடனடியாக கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Ragul_Fishermen

    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, கேரளா மீனவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

  • AnubutiShatabditrain

    விமானம் போன்ற சொகுசு வசதிகளுடன் கூடிய அனுபூதி பெட்டி: சதாப்தி ரயில்களில் இயக்க ரயில்வே திட்டம்

  • JamaMasjid_Crack

    361 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதியில் விரிசல்: விரைவில் சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை

  • PeriyaPandian_Homage

    காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தடைந்தது: கறுப்புப்பட்டை அணிந்து தலைவர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்