SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுமியை கடத்தி 5 பேர் பலாத்காரம்

2017-12-08@ 00:54:48

பெங்களூரு : துமகூருவில் சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரட்டிகெரேவை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ் (30). தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர்சிறுமி ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒரே பகுதி என்பதால் சிறுமியுடன் ஹரிஷிற்கு பழக்கம் ஏற்பட்டது. சிறுமி சகஜமாக பழகி வந்தார். ஆனால் ஹரிஷிற்கு சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க திட்டமிட்டார். இதற்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் ஹரிஷின் மனைவி  நேற்று முன்தினம் தனது குழந்தையுடன் அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஹரிஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹரிஷ், சிறுமியிடம் மாலையில் தனியாக பேசவேண்டுமென்று அழைத்துள்ளார். அதற்கு சிறுமி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை சிறுமியை ஆட்டோ ஒன்றில் ஏற்றிக் கொண்டு, எல்லாபுராவில் மூடப்பட்டு கிடந்த தனது தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றார். சமீபத்தில் தான் அந்த தொழிற்சாலை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர்தான் ஹரிஷ் ஆட்டோ வாங்கி ஓட்ட தொடங்கினார். தொழிற்சாலையில் ஆள் நடமாட்டம் இருப்பதில்லை என்பதால் சிறுமியை அங்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இந்த தகவலை தனது நண்பரான  சித்தானந்தாவிற்கு தெரிவித்தார். அவர் தனது நண்பர்களான மது, கேசவா, சந்துரு ஆகியோருடன் தொழிற்சாலைக்கு சென்றார். அங்கு 5 பேரும் மாறி மாறி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சிறுமி மயக்கம் அடைந்துவிட்டார். இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் முன்னதாக சிறுமியை எல்லாபுரா சாலையோரம் இறக்கி விட்டு விட்டு, தப்பியோடிவிட்டனர். அந்த வழியாக சென்றவர்கள், சிறுமி மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு துமகூரு ஊரக போலீசார், மாவட்ட எஸ்.பி திவ்யா, கூடுதல் எஸ்.பி ஷோபாராணி, மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா ஆகியோர் சென்றனர். அங்கு சிறுமியை மீட்ட அவர்கள் உடனே அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி கொடுத்த தகவலை பெற்றுக் கொண்ட போலீசார் நேற்று காலை முக்கிய குற்றவாளியான ஹரிஷ் மற்றும் அவரது நண்பரான சிதானந்தாவை கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேர் தலைமறைவாகவுள்ளனர். அவர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி தனிப்படை அமைத்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliland_boyshome

  தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

 • gujaratheavyrain

  குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

 • vintage_car_gurgaon

  பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

 • public_trans_venen

  வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

 • Manilarainstorm

  பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்