SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூதாட்டியிடம் செயினை அபேஸ் செய்த‘மோசடி ராணி’ உள்பட 2 பேர் அதிரடி கைது

2017-12-08@ 00:54:18

பெங்களூரு : பெங்களூரு காமாட்சிபாளையம் சரகத்திற்குட்பட்ட சுங்கதகட்டேவை சேர்ந்தவர் லட்சுமியம்மா. கடந்த 23ம் தேதி இவர் காய்கறி கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் லட்சுமியம்மாவின் எதிரே வந்து, இப்பகுதியில் கொலை, கொள்ளை அதிகரித்து காணப்படுகிறது. உங்கள் நகைகளை கழற்றி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி உதவி செய்வது போன்று நடித்தார்.
லட்சுமியம்மாவிற்கு அந்த பெண் மீது நம்பிக்கை வந்தது. அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பெண், லட்சுமியம்மாவின் கழுத்தில் கிடந்த தங்கசெயினை வாங்கி, காகிதத்தில் பொதிந்து கொடுப்பது போன்று நடித்துள்ளார். லட்சுமியம்மாவிற்கு அந்த பெண் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. பொதிந்து கொடுத்த காகிதத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று பிரித்து பார்த்தார். அதில் நகைகள் இல்லை. வெறும் கற்கள்தான் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இது குறித்து காமாட்சிபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடி செய்த பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ராம்நகர் சோமனஹள்ளியை சேர்ந்த மஞ்சுளா (35) என்று தெரியவந்தது. இவர் மோசடி செய்த நகைகளை ஆனேக்கல்லை சேர்ந்த ஹரிராம்  என்பவரிடம் விற்பனை செய்ததாக தெரியவந்தது. விசாரணையில்  அவர் கொடுத்த தகவலின் பேரில் ஹரிராமையும் போலீசார் கைது செய்தனர். சோதனையில் 2 பேரிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான 295 கிராம் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். கைதான 2 பேர் மீதும் காமாட்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்