SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசு ஊழியர் வீட்டில் 22 சவரன் கொள்ளை : வேலைக்கார பெண்ணிடம் விசாரணை

2017-12-08@ 00:29:30

சென்னை : மயிலாப்பூர் அப்பு தெரு சந்திப்பு சாலை தெரு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் வசிப்பவர் சீதாலட்சுமி (79). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது கணவர் ராமகிருஷ்ணன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது மகன் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். இதனால், சீதாலட்சுமி மட்டும் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிவிட்டு, தி.நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இதற்கிடையே இவரது வீட்டில் வேலை செய்யும் மயிலாப்பூர் லாலா தோட்டத்தை சேர்ந்த சாந்தி (51) என்பவர் நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவில் பூட்டு இல்லாமல் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.

உடனே இதுகுறித்து சீதாலட்சுமிக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 7.5 சரவன் தாலி செயின், 9.5 சவரன் கொண்ட 4 செட் வளையல், 2 சவரன் நெக்லஸ், 3 சவரன் மோதிரம் என 22 சவரன் நகை மாயமாகி இருந்தது. இதுகுறித்து சீதாலட்சுமி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில்  சீதாலட்சுமி வீட்டில் வேலை செய்யும் சாந்தி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், சாந்தியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்தவர் துரைராஜ் (40). பால் வியாபாரி. இவர், நேற்று மாலை நசரத்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது லோடு ஆட்டோவுக்கு டீசல் போட்டு விட்டு மீண்டும் ஆட்டோவில் ஏறினார். அப்போது சீட்டுக்கு அடியில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் கொள்ளை போனது தெரிந்தது. புகாரின்பேரில், நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்