SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவின் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

2017-12-08@ 00:28:52

சென்னை : எழும்பூர் கவின் கலை கல்லூரியில் இறுதியாண்டு இளங்கலை பட்டம் படித்து வந்த மாணவர் ஜோயல் பிரகாஷ் கடந்த அக்டோபர் 24ம் தேதி இரவு தனது சொந்த ஊரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் மரணத்துக்கு நீதிகேட்டு கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:

ஜோயல் பிரகாஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தன்னுடைய மரணத்துக்கு துறைத்தலைவர் தான் காரணம் என்று எழுதியுள்ளார். ஜோயல் பிரகாஷ் இறந்ததற்கு கல்லூரி முதல்வர், துறைத்தலைவர், வகுப்பு ஆசிரியர் தான் காரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். அதற்காகவே உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimala11

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • pothumakkal_siramam1

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

  • dubai_hospitalll11

    துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

  • Astronauts

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்