SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு குண்டாஸ்

2017-12-08@ 00:25:50

சென்னை : சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் பிரகாஷ். தொழிலதிபரான இவர், கடந்த மாதம் 11ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் பாலச்சந்தர் (27) என்னை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார். இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார் என குறிப்பிட்டிருந்தார். விசாரணையில் பாலச்சந்தர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதால் மாட்டின் தலையை தனது கட்சி அலுவலகத்தில் வீசியதும் தெரிந்தது.  அதன்படி அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலச்சந்தரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிைலயில் பாலச்சந்தர் மீது ஜாம்பஜார் காவல்நிலையத்தில் 2 வழக்குகள், அண்ணா சாலை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, சூளைமேடு காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் 4 வழக்குகள் என மொத்தம் 8 வழக்குகள் உள்ளதால் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்