SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கோரி ஆந்திர அரசுக்கு கடிதம் : பொதுப்பணித்துறை தகவல்

2017-12-08@ 00:25:25

சென்னை : சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் விளங்குகிறது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 27ம் தேதி முதல் பரவலாக பெய்து வருகிறது.  ஆனால் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய ஏரிகளுக்கு நீர் வரத்து பெரிய அளவில் இல்லை. 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி 1059 மில்லியன் கன அடியாகவும், 881 மில்லியன் கன அடி கொண்ட சோழவரம் ஏரி 600 மில்லியன் கன அடியாகவும், 3300 மில்லியன் கன அடி கொண்ட புழல் ஏரி 1680 மில்லியன் கன அடியாகவும், 3645 மில்லியன் கன அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 1903 மில்லியன் கன அடியாக மட்டுமே உயர்ந்துள்ளது. 11 டிஎம்சி கொண்ட இந்த ஏரிகளில் 5.2 டிஎம்சி நீர்தான் கிடைத்துள்ளது. இந்த நீர் 5 மாதங்களுக்கு சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்.

இந்நிலையில், எதிர்பார்த்த அளவு நீர்மட்டம் உயராதது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஆந்திர அரசிடம் தண்ணீர் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அரசு செயலாளர் பிரபாகர், கண்டேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி ஆந்திர அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து 5 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்