SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியிருப்பு பகுதியில் தேங்கும் மழைநீரை அகற்றாததால் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

2017-12-08@ 00:24:25

பல்லாவரம் : பல்லாவரம் நகராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட கட்டபொம்மன் நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் இந்த பகுதியில் தேங்கிய தண்ணீர் தற்போது வரை வடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தெருக்களில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் இதில் நடந்து செல்பவர்கள் சேற்றுப் புண், தோல் அலர்ஜி உள்ளிட்ட நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுஒருபுறம் இருக்க தெருக்களில் தேங்கும் குப்பையை துப்புரவு ஊழியர்கள் அகற்றாததால், தெருவெங்கும் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இதனால், டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அவலம் உள்ளது.

இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். அங்கு வந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையின் போது இப்பகுதி வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அப்போது நகராட்சி அதிகாரிகள், ‘இனிமேல் இந்த பகுதியில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று உறுதியளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் முறையாக சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தி வருகிறோம். சமீபத்தில் கூட பாதாள சாக்கடை திட்டத்திற்கு என நகராட்சி சார்பில் ரூ.10,560 முன் பணமாக வசூலித்தனர். ஆனால் அந்த பணியும் முழுமையாக நிறைவு பெறாமல் பாதியிலேயே உள்ளது. போதிய குப்பை தொட்டி வைப்பதில்லை, சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதால், நோய்பாதிப்பில் தவிக்கிறோம். ஆனால், இதுபற்றி புகார் அளித்தால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதே நிலை நீடித்தால், மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்,’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-10-2018

  23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்