SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக திலீப்புக்கு உத்தரவு

2017-12-08@ 00:20:21

திருவனந்தபுரம் : நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்பட 7 பேர் மீது அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே திலீப்புக்கு எதிராக கடந்த 22ம் தேதி அங்கமாலி நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் திலீப் 7வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 1,542 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் திலீப்பின் முன்னாள் மனைவி நடிகை மஞ்சுவாரியர் உள்பட 355 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகையை அங்கமாலி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து விரைவில் இந்த வழக்கில் விசாரணை தொடங்க உள்ளது. தொடர்ந்து வரும் 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராக கூறி நடிகர் திலீப்புக்கு அங்கமாலி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. ஆகவே அன்று ஆஜராகி அவர் வாக்குமூலம் அளிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்