SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவனந்தபுரம் விமானப்படை உதவியை நாடிய குமரி மீனவர்கள்

2017-12-08@ 00:19:43

திருவனந்தபுரம் : குமரியிலிருந்து மீன் பிடிக்க சென்று கடலில் மாயமான 23 மீனவர்களை மீட்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீனவர்கள் திருவனந்தபுரம் சென்று விமானப்படையின் உதவியை நாடியுள்ளனர். ஓகி புயலின் போது குமரியிலிருந்து கடலில் மாயமானவர்களின் எண்ணிக்கை 1013 பேர் என்று குமரி மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் 65 மீனவர்கள் மட்டுமே மாயமாகியுள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையே கேரள கடல் பகுதியிலிருந்து நேற்று 15 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். நேற்று கேரள கடல் பகுதியிலிருந்து மேலும் 3 மீனவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் அவர்கள் யார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதையடுத்து கேரளாவில் ஓகி புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று திருவனந்தபுரம் விமானப்படை அதிகாரிகளை சந்தித்து தூத்தூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான 23 மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தூத்தூரிலிருந்து கிளீட்டஸ் என்பவருக்கு சொந்தமான பூண்டி மாதா மற்றும் பிரகாச மாதா என்ற 2 படகுகளில் கடந்த சில தினங்களுக்கு முன் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
அந்த படகுகளில் கிளீட்டஸ், லூயிஸ், ஆரோக்கியம், ரோக்கிஸ், பிரான்சிஸ், ஆன்டனி, கஸ்பர், அருளானந்தம், பிஜின் உட்பட 23 மீனவர்கள் இருந்தனர். இந்தப் படகில் நாகப்பட்டினத்தை சேர்ந்த 10 பேரும் இருந்தனர். இவர்களில் ஒருவரது செல்போனை தொடர்பு கொண்டபோது அதில் மணி அடித்ததாக மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்த விவரங்களுடன் குமரியிலுள்ள அதிகாரிகளை சந்தித்து, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் உறவினர்கள் கோரினர். ஆனால் தமிழக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து தூத்தூர் மீனவர்கள் நேற்று திருவனந்தபுரம் வந்து விமானப்படை அதிகாரிகளை சந்தித்து காணாமல் போன 23 மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.

‘தூத்துக்குடி மீனவர்கள் உடல்களை அடையாளம் கண்டு ஒப்படைப்போம்’
    
கேரளாவில் கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற தூத்துக்குடி மீனவர் காலனியைச் சேர்ந்த ஜூடு (43), அவரது மகன் பாரத் (19), ரவீந்திரன் (50) ஜோசப் (70), கிங்ஸ்டன் (45), ஜெகன் (40) ஆகிய 6 பேர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ஓகி புயலில் சிக்கினர்.  இதில் ஜெகன் தவிர அனைவரும் இறந்தனர். அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனையில் அடையாளம் தெரியாத மேலும் 10 மீனவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

அந்த உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் உறவினர்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.  இதையடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்தி அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மீனவர்களின் உறவினர்கள் ேநற்று முன்தினம் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து, பலியான உறவினர்கள் உடல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு கேட்டு கொண்டனர். இதையடுத்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • TurkishForcesAfrin

  சிரியாவின் ஆஃப்ரின் நகரை கைப்பற்றிய துருக்கி ராணுவம்: குர்திஷ் மக்களுக்கான சிலையை தகர்த்தது

 • MicrosoftWordTeacher

  கரும்பலகையில் கணினி வரைந்த ஆசிரியருக்கு கம்ப்யூட்டர்களை வழங்கி சர்ப்பரைஸ் செய்த இந்திய நிறுவனம்: புகைப்படங்கள்

 • WorldsRichestCities2018

  வெளிநாட்டினர் வசிப்பதற்கு மிகவும் விலையுயர்ந்த 10 நகரங்கள்: புகைப்பட தொகுப்பு

 • HongKongFlowershow

  கண்கவரும் மலர் கண்காட்சி ஹாங்காங்கில் தொடக்கம்: ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

 • GudiPadwa2018Mumbai

  மகாராஷ்டிர மாநிலத்தில் குடிபத்வா என்ற புத்தாண்டு: வெகுவிமரிசையாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்