SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிப்படையும் சென்னைக்கு புதிய மின் திட்டங்களை அமல்படுத்த ரூ.3,200 கோடி நிதி

2017-12-08@ 00:19:02

சென்னை : சென்னையின் புதிய மின் திட்டங்களை அமல்படுத்த ரூ.3,200 கோடி நிதி வழங்குவதாக  மத்திய மின்துறை அமைச்சர் ஆர்கே.சிங், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் உறுதி அளித்துள்ளார். எரிசக்தி ,புதிய மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி ஆகியவை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் சார்ந்த மாநாடு நேற்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்கே.சிங் தலைமையில் டெல்லியில் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு மாநில மின்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தின் சார்பாக அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். இது குறித்து அமைச்சர் கூறுகையில், சென்னை ஆண்டுதோறும் இயற்கை சீற்றங்களால் அதிகளவில் பாதிக்கிறது. இதனால் மக்கள் மின்சாரம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்னைகளை தீர்க்கும் வகையில் சென்னை முழுவதும் மின் கம்பிகளை, பூமிக்கு அடியில் செல்லக்கூடிய கேபிளாக மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக மட்டும் மத்திய அரசிடம் இருந்து 3,200 கோடி நிதி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் ஆர்கே.சிங்கும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னைக்கும், அடுத்து மாநிலம் முழுவதும் கேபிள் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான மரங்கள் வீழ்ந்தும், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் கீழே சாய்ந்தும் உள்ளன. இதனை சீரமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்து விட்டது. மீதமுள்ள பணிகள் ஓரிரு நாட்களில் செய்து முடிக்கப்படும். இதனை செய்து முடிக்க வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 8 ஆயிரம் மின் பணியாளர்களை வரவழைத்து போர்கால அடிப்படையில் வேலை நடத்தி முடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை புயலால் பாதிக்கப்பட்ட மொத்த இழப்பீடுகளை கணக்கீடு செய்து மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்கப்படும். என அவர் நேற்று டெல்லியில் தெரிவித்தார். 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • purijaggannathartemple

    உலக புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் : கோலாகல கொண்டாட்டம்

  • WorldCup2018France

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2வது முறையாக பிரான்ஸ் அணி சாம்பியன்: ரூ.256 கோடி முதல் பரிசு

  • 16-07-2018

    16-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்