SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராமநாதன் நியமனம் : உயர் நீதிமன்றம் உத்தரவு

2017-12-08@ 00:18:12

சென்னை : திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் சனிக்கிழமை சங்கத் தலைவர்  நடிகர் விஷால் தலைமையில் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.  இந்நிலையில் இந்த பொதுக்குழுவுக்கு தடை கோரி தயாரிப்பாளர்கள் ஆர்.கிஷோர் குமார், ஆர்.வடிவேல், பி.சரவணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்  வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. சங்க பொதுக்குழுவில்  தேர்தல் வாக்குரிமை தொடர்பாக சங்க விதிகளில் திருத்தம் கொண்டு  வரப்பட உள்ளதாக தெரிகிறது. இவ்வாறு திருத்தம் கொண்டு வந்தால், சங்கத்தில் ஏற்கனவே உறுப்பினராக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

சங்கத்தின் விதிகளில் 3 படங்கள் தயாரித்து இருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சில திருத்தங்களும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சிறு தயாரிப்பாளர்களின் வாக்குரிமை பாதிக்கப்படும். எனவே வரும் டிச.10ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது. ஆனால் பொதுக்குழுவை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் நியமிக்கப்படுகிறார்.  

அவருக்கு சங்க உறுப்பினர்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அடையாள அட்டை உள்ள உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டும். இந்த பொதுக்குழுவில்   எடுக்கப்படும் தீர்மானங்கள் இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்பட்டது. இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimala11

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • pothumakkal_siramam1

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

  • dubai_hospitalll11

    துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

  • Astronauts

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்