SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக ஹாக்கி லீக் பைனல் தொடர் அரை இறுதியில் அர்ஜென்டினா

2017-12-08@ 00:13:22

புவனேஸ்வர் : உலக ஹாக்கி லீக் பைனல் தொடரின் அரை இறுதியில் விளையாட அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது. பரபரப்பான கால் இறுதியில் அந்த அணி இங்கிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இரு பிரிவுகளில் நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில், கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் கால் இறுதியில் ஆஸ்திரேலியா 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை பந்தாடிய நிலையில், 2வது கால் இறுதியில் இந்தியா பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை அதிர்ச்சி தோல்வியடையச் செய்து அரை இறுதிக்கு முன்னேறியது. இந்த நிலையில், நேற்று நடந்த 3வது கால் இறுதியில் இங்கிலாந்து - அர்ஜென்டினா மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் அர்ஜென்டினா அணியின் லூகாஸ் விலா 21வது நிமிடத்தில் அபாரமாக பீல்டு கோல் அடித்து 1-0 என முன்னிலை கொடுத்தார். அடுத்து 29வது நிமிடத்தில் மதியாஸ் பர்தேஸ் கோல் அடிக்க அர்ஜென்டினா 2-0 என முன்னிலை பெற்றது.

அடுத்த சில விநாடிகளிலேயே பந்தை அபாரமாக கடத்திச் சென்ற இங்கிலாந்து அணியின் டேவிட் காண்டன் கோல் அடித்து 1-2 என முன்னிலையை குறைத்தார். இதைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்திய அர்ஜென்டினா அணிக்கு 34வது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் வழங்கப்பட, ஜுவன் கிலார்டி மின்னல் வேகத்தில் கோல் அடித்து 3-1 என முன்னிலையை அதிகரித்தார். பதிலுக்கு இங்கிலாந்து வீரர் ஆடம் டிக்சன் 60வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Ragul_Fishermen

    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, கேரளா மீனவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

  • AnubutiShatabditrain

    விமானம் போன்ற சொகுசு வசதிகளுடன் கூடிய அனுபூதி பெட்டி: சதாப்தி ரயில்களில் இயக்க ரயில்வே திட்டம்

  • JamaMasjid_Crack

    361 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதியில் விரிசல்: விரைவில் சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை

  • PeriyaPandian_Homage

    காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தடைந்தது: கறுப்புப்பட்டை அணிந்து தலைவர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்